உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி..



அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(92) கடுமையான உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக கடந்த 1989 முதல் 1992-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர், ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ். இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை இரு முறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்(92) கடுமையான உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஹூஸ்டன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக, ஊடகங்களுக்கு தகவல் அளித்துள்ள இவரது செயலாளர், லேசான கபவாதம் சார்ந்த தொந்தரவுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இன்றும் உயிருடன் வாழ்ந்து வரும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் ஒருவர்தான், என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ஆப்கானிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி

wpengine

மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இங்கிலாந்தை மிரட்டும் இமோகென் புயல்

wpengine

உலக மக்களின் மனங்களை உலுக்கிய மற்றுமோர் அலன் குர்தி..

wpengine