உலக செய்திகள்

இந்திய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கைது..



இந்திய வங்கிகளில் கோடிக் கணக்கில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல், லண்டலின் பதுங்கியிருந்த விஜய் மல்லையாவை ஸ்கார்ட்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திருப்பி செலுத்தவில்லை. எனவே, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக அவர் லண்டன் தப்பிச் சென்றார்.

எனவே, அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இது தொடர்பாக ஸ்கார்ட்லாந்து யார்டு பொலிஸாரின் உதவியை நாடியது.

இதையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, விரைவில் அவர் இந்தியாவிற்கு கொண்டு வருவார் என மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

(rizmira)

Related posts

சிங்கப்பூர் ஆசியப் பொருளாதாரத்தின் சிங்கம் – மோடி

wpengine

பயிற்சி விமானங்கள் விபத்து – பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு…

wpengine

லிபியாவில் இருந்து தாமாக வெளியேறிய 174 சட்டவிரோத குடியேறிகள்…

wpengine