உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதிய ஒழிப்புக்கு எதிராக அரச அதிகாரிகள் நடவடிக்கை..



ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான அரசின் முயற்சிக்கு எதிராக அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அண்மையில் கூறிய கருத்தின்படி ஓய்வூதியத்தை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தெரிய வந்துள்ளதாக ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜானக துஷார கூறினார்.

தற்போது கூட அரச ஊழியர்கள் ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்களை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் அரசின் திட்டத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜானக துஷார மேலும் கூறினார்.

(rizmira)

Related posts

வடபகுதி நிலங்கள் இராணுவத்திற்கே சொந்தம் – பா.உ வீரக்குமாரவினது சர்ச்சைக்குரிய கருத்து..

wpengine

கோப் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு சிறப்புரிமை மீறலாகும் – பிமல்

wpengine

இலங்கையில் திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவருவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்மொழிவு 

Azeem Kilabdeen