உள்நாட்டு செய்திகள்

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல, உண்மை ஆணைக்குழு விரைவில்..



உண்மை ஆணைக்குழு மற்றும் காணாமல் போனவர் அலுவலகம் விரைவில் உருவாக்கப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்கள் இலகுவானதல்ல என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் மேற்குறித்த இரு அலுவலகங்களும் விரைவில் உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கத்தை கூடிய விரைவில் எட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனநாயக நெறிமுறையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தங்கள் பிரயோகிக்கவில்லை எனவும், சில சிங்கள , தமிழ் கடும்போக்காளர்கள் இனவாதத்தை விதைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், நல்லிணக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற முனைப்புக்களில் சில தரப்பினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)

Related posts

SJB சம்பளத்தை வழங்க முடிவு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இதுவரை 293 பேர் கைது

wpengine

நேவி சம்பத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine