உலக செய்திகள்

‘நிகாப்’ ஆடைக்கு எகிப்து பாராளுமன்றம் தடை விதிக்கிறது..



முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க அணியும் நிகாப் ஆடைக்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்றை எகிப்து பாராளுமன்றம் இயற்றி வருகிறது.

பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் குறித்த இந்த ஆடையை அணிய தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் ஒப்பீட்டு சட்டவியல் பற்றிய அல் அஸ்ஹர் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அம்னா நுஸைர், முகத்தை மறைக்கும் ஆடை இஸ்லாத்துடன் தொடர்புபட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாத்திற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் யூத சம்பிரதாயமாக புர்கா ஆடை இருந்ததாக குறிப்பிடும் அந்த பாராளுமன்ற உறுப்பினர், இது குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் முகத்தை மறைக்கும் நிகாப் ஆடைக்கு அண்மைக் காலத்தில் எகிப்தில் பல கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரியில் மருத்துவர்கள், மருத்துவ தாதிகள் நிகாப் அணிய கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவ பீடம் தடை விதித்தது. கடந்த செப்டெம்பரில் பல்கலைக்கழகங்கள் கல்விசார் ஊழியர்களுக்கும் நிகாப் அணியத் தடை விதித்ததும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

கல்லறைகள் இன்றி காத்திருக்கும் சடலங்கள்

wpengine

பிரான்ஸின் மூத்த இராணுவ அதிகாரி கைது

wpengine

கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டு போர்ப்பயிற்சி..

wpengine