உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு வௌிநாடு செல்ல அனுமதி…



பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு முதன்மை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த விடுத்திருந்த கோரிக்கைக்கு அமையவே கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிவான் லால் பண்டார ரணசிங்க இன்று (31) மேற்குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இன்று(31) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை மஹிந்தானந்தவுக்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக தெரிய வருகின்றது.

மஹிந்தாநந்த அளுத்கமகே, விளையாட்டுத் துறை அமைச்சில் பணியாற்றிய போது பாடசாலைகளுக்காக விளையாட்டு உபகரணங்களை வழங்கும் போர்வையில் அமைச்சின் நிதியை பயன்படுத்தி விளையாட்டு உபகரணங்களை பெற்று அவற்றை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இலங்கையில் ஸ்மார்ட் சிட்டிக்கு தென்கொரியா முதலீடு – ஒப்பந்தமும் கைச்சாத்து

wpengine

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் கொலை – இருவர் வலையில்..

wpengine

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 16 பேர் வெளியேறினர்

wpengine