உள்நாட்டு செய்திகள்

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதாரனவிடம் விசாரணை…



தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று(28) நீண்ட நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கபில ஹெந்தவிதாரன தலைமையிலான குழுவொன்று கடந்த காலங்களில் கொலைகள், கடத்தல்கள், கப்பம் கோரல்கள் மற்றும் தாக்குதல்களை மேற்கொண்டதாக அண்மையில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்கு மூலம் அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஹெந்தவிதாரனவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் நாட்களில் காவற்துறை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த மேலும் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

பாலியல் தொந்தரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இற்கு இந்திய நீதிமன்ற, அழைப்பாணை.

wpengine

பங்களாதேஷுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்..

wpengine

ஞானசார தேரர் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் சகோதரர்கள் – அமைச்சர் மனோ அம்பலம்..

wpengine