உள்நாட்டு செய்திகள்

இலவசக் கல்விக்காக நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டை…



நாடளாவிய ரீதியில் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கான மனுவில், 25 இலட்சம் பேரிடம் கையெழுத்து பெரும் வேலைத்திட்டம் ஒன்று இன்று(24) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வைத்தியபீட மாணவர் செயற்குழுவுடன் இணைந்து குறித்த இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த ஒன்றியத்தின் அமைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை தடை செய்தல், பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்போரை அதிகப்படுத்தல் மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துதல் உள்ளிட்ட சில விடயங்கள் இந்த மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த மனுவில் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை இன்று சில பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லஹிரு மேலும் தெரிவித்துள்ளார்.

(rizmira)

Related posts

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்…

wpengine

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஒரே தினத்தில்…

wpengine

றுஹுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகம், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது…

wpengine