உள்நாட்டு செய்திகள்

மேர்வின் சில்வா தலைமையில் இளைஞர் யுவதிகளுக்கு சேவை செய்ய புதிய கட்சி…



புதிய அரசியல் கட்சியொன்றை தாம் ஆரம்பிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்

அநீதிக்கு உட்பட்டுள்ள தம்மைப் போன்ற எந்தவொரு நபரும் குறித்த இந்த அரசியல் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் என அவர் மேலும் அழைப்பு விடுத்துள்ளார்.

எனது அரசியல் கட்சியின் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது.

வீ.ஐ.பீ(VIP) என்ற பெயரைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மந்திரி என்பதற்கு பதிலாக மக்கள் சேவகன் என விழிக்கப்பட வேண்டும்.

எனது கட்சி இளைஞர் யுவதிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் கட்சியின் பெயர் அல்லது வேறும் விபரங்களை மேர்வின் சில்வா அறிவிக்கவில்லை.

(rizmira)

Related posts

ஆஸி உடனான டெஸ்ட் தொடருக்கான அணியில் ஹபீஸ் இணைப்பு.. (குழாம் விபரம்)

wpengine

ஆசிய கிண்ண T20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க பங்கேற்பார்

wpengine

சுவிஸ் தூதரக அதிகாரி CID யில் முன்னிலை

wpengine