ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெள்ளைக்கொடி விவகாரத்தில் பிரதமர் ஆவேசம்



பொன்சேகாவை இழுத்துக் கொண்டு சென்று அவரை சிறையில் தள்ளியவர்கள் யார் என்பது நன்றாகவே தெரியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

வெள்ளைக் கொடி விவகாரத்தில் அமைச்சர் பொன்சேகா மீது நாம் வழக்கு தொடுக்கவில்லை. அவரை இழுத்துக் கொண்டு சென்று சிறையில் அடைக்கவில்லை.

ஆனால் அப்போது முறைகேடாக நடந்து கொண்டார்கள். அதற்காக இப்போது அவரிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கின்றீர்களா? இதனை பகிரங்கமாக கூறுங்கள் பார்க்கலாம்.

அதேபோல அம்பாந்தோட்டையை விற்க போவதும் இல்லை அதனை விற்க வேண்டிய அவசியமும் இல்லை.

அதனை அபிவிருத்தி செய்து நாட்டையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதோடு வருமானத்தை ஈட்டும் நடவடிக்கையினையே நாம் செய்து வருகின்றோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Related posts

கட்சித் தலைமை மற்றும் பதவிகளை சஜித்திற்கே வழங்க ரணில் இணக்கம்

wpengine

வெள்ளவத்தையில் கைதான இரு தாய்லாந்து நாட்டு பெண்களுக்கு எய்ட்ஸ் !

wpengine

கோட்டா ஜனாதிபதியானால் ரணிலின் பதவி பறிபோகும் – மஹிந்த [VIDEO]

wpengine