உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பல் பாதுகாப்பாக மீட்பு…



சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை பணியாளர்களும் கப்பம் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக குறித்த கப்பலின் தலைவர் நிக்கலஸ் அந்தோனி உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் தாக்குதல்களை நடத்தியும் பலனளிக்கா நிலையில், படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனை அடுத்து எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களும் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பலைக் கடத்திய கடற்கொள்ளையர்களுக்கு சோமாலிய அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கவும் இணங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இறுதியாக 2012ம் ஆண்டு ஒரு வர்த்தக கப்பல் கடத்தப்பட்டிருந்தன் பின்னர், 5 வருடங்களின் பின்னர் Aris13 என்ற இந்த கப்பல் கடத்தப்பட்டது.

2010ம் ஆண்டுகளில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் 50 கப்பல்கள் வரையில் கடத்தப்பட்டு, ஆயிரத்துக்கும் அதிகமான கடலோடிகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டதுடன், 7 பில்லியன் டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு…

wpengine

AstraZeneca 2வது டோஸ் செலுத்துகை

wpengine

ராவணா எல்ல வனப்பகுதியில் தீ

wpengine