உலக செய்திகள்

அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை…



அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக மக்கள் அனைவரையும் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பனிப்புயல் காரணமாக தற்போது 7,600 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வடகிழக்கு பருவ மழை காரணமாக தற்போது அமெரிக்காவில் மணிக்கு 50 – 60 Km வேகத்தில் பனிப்புயல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு பகுதியில் பனிப்புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலை தற்போது நீடிப்பதன் காரணமாக 31 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமன்றி தற்போது காலவரையறை இன்றி ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்லாயிரக்கணக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பலத்த காற்றுடன் இந்த பனிப்புயல் வீசுவதன் காரணமாக மக்களை வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலைமை அதிகரிக்கும் நிலையில் நியூயோர்க், போஸ்டன் ஆகிய நகரங்களில் பனிப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு…

wpengine

மேற்குலகில் புரளும் துபாய் இளவரசியின் ஆடைக்கலாசரம் (PHOTOS)

wpengine

அடுத்த வரும் சில நாட்கள் மிக முக்கியமானது

wpengine