கேளிக்கை

நடிகை அமலாபாலின் தம்பி ஹீரோவாக களத்தில்….



நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால் ஏற்கெனவே ஒரு சில மலையாள படங்களில் நடித்து வந்த நிலையில், மோகன்லால் – அமலாபால் இணைந்து நடித்த ‘லைலா ஓ லைலா’ படம் தான் இவர் அறிமுகமானது. தமிழில் பிரபு தேவா – தமன்னா நடிப்பில் வெளி வந்த ‘தேவி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அபிஜித் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் அந்த படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். இந்த படத்தின் இரண்டு சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருக்கிறதாம். அதாவது இந்த படத்தில் இடைவேளை என்பதே கிடையதாம். அதேபோல், இப்படத்தில் பாடல்களும் கிடையதாம்.

இப்படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

எளிமையான முறையில் திருமணம்…

wpengine

8 வருடங்களுக்குப் பிறகு “Gulab Jamun” இல் மீண்டும் இணையும் ஜோடி…

wpengine

யாழ்.நூலகத்திற்கு அத்து மீறிய ஆர்யா.. – யாழ். மாநகர சபை கண்டனம்..

wpengine