உலக செய்திகள்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்’கிற்கு விடுதலை…



சிறைக் கைதியாக உள்ள எகிப்தின் முன்னாள் முதலாவது ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இவ்வாரம் விடுதலையாவார் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரேபியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட மறுமலர்ச்சியை அடுத்து ஊழல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் ஹொஸ்னி முபாரக் 2012ஆம் ஆண்டு சிறை வைக்கப்பட்டார்.

கடந்த 6 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் ஹொஸ்னி முபாரக், தனக்கெதிரான வழக்கின் மீது இம்மாதம் நடைபெற்ற விசாரணையின் போது நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் இன்னும் ஓரிரு தினங்களில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது பதவிக் காலத்தில் ஊழல்களில் ஈடுபட்டது மட்டுமன்றி, தனக்கெதிராகப் போராட்டங்களில் இறங்கிய 239 பேரைக் கொல்வதற்கு ஆணையிட்டதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு…

wpengine

அகதிகளை குறிவைத்து ஜேர்மனிய அதிபரின் அரசியலால் சிக்கல்..

wpengine

சவுதி அரேபியாவில் விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய அனுமதி…

wpengine