உள்நாட்டு செய்திகள்

31 ஆண்டுகளுக்கு பின்னர் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு…


இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, கொரிய குடியரசின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் யுன் பியுங் ஸி நாளை(15) இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த 31 ஆண்டுகளில் கொரிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதன் முறையாகும்.

குறித்த இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர், இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இதற்கு முன் 1986ஆம் ஆண்டு, கொரியக் குடியரசின் அப்போதைய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த லீ வொன் கியூங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இன்று முதல் உணவுப் பொதியின் விலையில் அதிகரிப்பு..

wpengine

புகையிரத போக்குவரத்தில் தாமதம்…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை

wpengine