ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சபாநாயகரினால் இது வரை வெளியேற்றப்பட்டவர்களின் பட்டியல்



இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தனவுக்கு, சபை நடவடிக்கைகளில் ஒரு வாரம் பங்கேற்காமல் இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

சபாநாயகரின் கட்டளைகளுக்கு அமைய இவ்வாறு சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட முதல் உறுப்பினர் இவரல்ல.

சபாநாயகரை மீறி சென்ற பலர் முன்னைய ஆண்டுகளில் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதில் சில 1952 அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் வவுனியா சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சுந்தர்லிங்கம் இவ்வாறு வெளியேற்றப்பட்டிருந்தார்.

1955 ஏப்ரல் 5 ஆம் திகதி மொரட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் சோமவீர சந்திரசிரி சபாநாயகரின் கட்டளைக்கு மதிப்பளிக்காததால் வெளியேற்றப்பட்டார். (இந்த விவகாரம் பாராளுமன்ற சிறப்புரிமை வழக்கொன்றில் இறுதியாக போய் முடிந்தது).

1956 ஆம் ஆண்டு அல்லது அதனை அண்டிய காலப்பகுதியில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.தஹநாயக்க வெளியேற்றப்பட்டிருந்தார்.

1960 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரொபர்ட் குணவர்தன பாராளுமன்றில் இருந்து பொலிஸாரின் தலையீட்டுடன் வெளியேற்றப்பட்டார். ( காரணம்: சபாநாயகர் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தமை)

1980 ஆம் ஆண்டு சரத் முத்தெட்டுகம பாராளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அறுவர் ஒரே நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.

தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராக இருந்தபோது வெளியேற்றப்பட்டார்.

இறுதியாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான தினேஸ் குணவர்தன நேற்று (8) வெளியேற்றப்பட்டார்.

Related posts

தெரிவிவுக்குழு முன்னிலையில் கோத்தாபய..

wpengine

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி குறித்து CID விசாரணை…

wpengine

மாத்தறை நகைக்கடை கொள்ளையின் போது பயன்படுத்திய துப்பாக்கி அமைச்சருடையது…

wpengine