உள்நாட்டு செய்திகள்

ஒற்றை சிகரட் விற்பனைக்கு தடை விதித்து அமைச்சரவை பத்திரம்…



புகைத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒற்றை சிகரட் விற்பனைக்கு தடை விதித்து  சட்ட விதிகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெறுவதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலத்தில் புகைத்தல் பொருட்களுக்கான வரியை நூற்றுக்கு 90% அதிகரிப்பதற்கும், விளம்பரப்படுத்தல் மேற்கொள்ளாத வகையில் தனி வெள்ளை நிறமான சிகரட் பெட்டியினை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புளத் சிங்கள – ரெட்டியல பாடசாலையில் இடம்பெறும் மருத்துவ முகாமை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

11 ஊடகவியலாளர்களும் உள்ளிட்ட 103 பேருக்கு காயம்!

News Editor

ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்பு

wpengine

ஜனாதிபதி தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி மனு தாக்கல்

wpengine