உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான பாராட்டுதல் மஹிந்தவையே சாரும் – கபீர் ஹாஷீம்…



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சாட்டியுள்ளது.

யுத்தத்தின் பின்னராக பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷீம் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான பாராட்டுதலை மஹிந்தவிற்கு வழங்கப்பட வேண்டிய அதேவேளை, அதன் பின்னரான பிரச்சினைகளுக்கு மஹிந்த தீர்வு காண முனைப்பு காட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலைகளை நிர்மானிப்பதன் மூலமும் கட்டடங்களை அமைப்பதன் மூலமும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ள அவர் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அ குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நாடு பாரியளவில் கடன் பொறியில் சிக்கியமை அம்பலமாகியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கான ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்…

wpengine

மொட்டு உறுப்பினர்கள் 40 பேருக்கு ஐதேக ஆசன அமைப்பு பதவி..!

wpengine

அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine