உள்நாட்டு செய்திகள்

லண்டன் – இஸ்லாமாபாத்திற்கு இடையில் சேவையில் இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பாகிஸ்தான் மூடுவிழா…



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையிடம் குத்தகை ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்த A-330 விமானத்தை இலங்கையிடம் மீளவும் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கான் விமான சேவை நிறுவனத்திடமிருந்து 19 மில்லியன் ரூபா குத்தகையின் அடிப்படையில் பாகிஸ்தான் விமானத்தை கொள்வனவு செய்திருந்தது. அந்த விமானம் லண்டன் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையில் சேவையில் ஈடுப்பட்டது.

எவாராயினும், விமானம் பயணத்தில் ஈடுபடும் போது அனைத்து சந்தர்ப்பங்களிலும் மணிக்கும் 8000 டொலர் செலவிடப்படுவதாகவும், எதிர்பார்த்தவை போன்ற விமானத்தின் ஊடாக வருமானம் பெற்றுக் கொள்ள முடியாமையினால் பாகிஸ்தான் மீண்டும் அந்த விமானத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் இந்த விமானம் குத்தகை அடிப்படையில் இலங்கையிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டது.

தற்போது வரையில் சர்வதேச விமான சேவையின் பொறியியல் பிரிவை பயன்படுத்தி பாகிஸ்தான் சின்னத்தை நீக்கி
விட்டு ஸ்ரீலங்கன் சின்னத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

பிரித்தானியாவுடனான புதிய உடன்படிக்கைக்கு தயாராகிறது இலங்கை – பிரதமர்

wpengine

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு

wpengine

சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து

wpengine