உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சைட்டம் விவகாரம் – மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் பணி முடக்கம்…



சைட்டம் நிறுவன விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும், வேலை நிறுத்தப் போராட்டங்களில் அடுத்த கட்டம் மேல் மாகாணத்தில் இன்று(03) முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகச் செயலாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று காலை 08.00 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அன்றைய தினம் பகல் 01.00 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாக ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புப் பேரணி விகாரமஹாதேவி பூங்கா வரை செல்லவுள்ளது.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில் எதிர்ப்புக் கூட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சமந்த ஆனந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப்புக்கு 12 மணி நேர பரோல்…

wpengine

அநுர சேனாநாயக்கவை சந்திக்க மஹிந்தவின் வழக்கறிஞர்கள் சிறைச்சாலையில்

wpengine

ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு

wpengine