உள்நாட்டு செய்திகள்

UPDATE – பெந்தொட்ட கடலில் நீராட சென்ற மாணவனின் சடலம் மீட்பு…


பெந்தொட்ட கடலில் நீராட சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரவு 9.00 மணியளவில் கடற்படை நீர்மூழ்கும் அதிகாரிகளால் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 15 வயதான பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரு மாணவர்களுடன் இவர் நேற்று பெந்தொட்ட கடலில் நீராட சென்றுள்ள நிலையில், அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது  இருவரை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

உயிரிழந்துள்ள மாணவனின் சடலம் காலி – கராபிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

…………………………… Update 9.00 PM

அளுத்கம, தர்கா நாகர் பிரதேச மாணவர்கள் மூவர் பெந்தரை ஆற்றில் குளிக்க சென்ற வேளையில் அலைக்கு அடிக்கப்பட்டு செல்கையில் அப்பிரதேச மக்களால் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவனை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றதாகவும், காப்பாற்றப்பட்ட இரு மாணவர்களும் பெந்தரை மற்றும் பலப்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

wpengine

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு..

wpengine

எரிபொருள் ஒதுக்கீட்டில் மறு அறிவித்தல் வரை மாற்றமில்லை – அமைச்சர் கஞ்சன

News Editor