உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘டொப் டென்’ குற்றச்சாட்டின் கீழ் த 9 ஆவது முறைப்பாடு சுகாதார அமைச்சர் ராஜித’விற்கு…



ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் ‘டொப் டென்’ குற்றச்சாட்டின் கீழ் தற்போதைய அரசில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகளின் 9 ஆவது முறைப்பாடு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று(01) இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முறைப்பாடு செய்துள்ளது.

புற்றுநோய் தடுப்பூசிகளை கொண்டு வரும்போது ரூபாய் 990 மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் டொப் டென் குற்றச்சாட்டின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் அர்ஜூன மகேந்திரன், அமைச்சர்களான தலதா அதுகோரல, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம், பீ ஹெரிசன் உடன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதும் இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் நாடளாவிய ரீதியில் கடும் மழை…

wpengine

வெல்லம்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

wpengine

வொற்சன் ஒரு புற்றுநோய்க் கட்டி – கிளார்க் விமர்சனம்..

wpengine