உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியல் யாப்பு பணிகள் மீளவும் ஆரம்பம்…



புதிய அரசியல் யாப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று(21) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி அரசியலமைப்பிற்கான பிரதான வழிநடத்தல் குழு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று கூடவுள்ளது.

புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கும் நோக்கில் முழு நாடாளுமன்றமும் அரசியலமைப்பு நிர்ணயச் சபையாக மாற்றப்பட்டது.

இதன் பிரகாரம் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக பிரதான வழிநடத்தல் குழு நிறுவப்பட்டதோடு அதன் கீழ் 6 உப குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பினைத் தயாரிப்பதற்கான 1வது நிர்ணயச் சபை கடந்த வருடம் ஏப்ரல் 5ஆம் திகதி கூடியது.

அதுதொடக்கம் அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்தன. உப குழு அறிக்கைகளும் அரசியலமை்பு நிர்ணயச் சபையில் சமர்பிக்கப்பட்டன. எனினும் இதற்கான விவாதம் இதுவரை இடம்பெறவில்லை.

அரசியலமைப்பினை தயாரிப்பதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் இதுவரை சமர்பிக்கப்படவில்லை. இந்நிலையில் வழிநடத்தல் குழுவின் நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை தொடர்பாக நாடாளுமன்றத்திலும் சர்ச்சையான நிலைமையும் ஏற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இடிபாடுகளுக்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

wpengine

அத்துரலிய ரத்ன தேரர், தேசியப் பட்டியல் ஆசனத்தை மீள் ஒப்படைக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய…

wpengine

தேர்தல் கட்டுப்பணத்தில் மாற்றம்

wpengine