உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நிரோஷன் திக்வெல்ல’வுக்கு ICC இனால் போட்டித் தடை விதிப்பு…



இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல’விற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா அணியுடன் கடந்த ஞாயிறன்று(19) இடம்பெற்ற இரண்டாவது T-20 போட்டியில் ஆட்டமிழந்து செல்கையில் அவர் நடந்து கொண்ட விதமானது இதற்கு காரணமாக நோக்கப்படுகின்றது.

நிரோஷன் திக்வெல்ல குறித்த முறைப்பாடு இன்று(21) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு நாளைய(22) போட்டியும் அடுத்து வரும் ஒருநாள் போட்டியொன்றும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும், தென்னாபிரிக்க அணியுடனான இடம் பெற்ற ஒருநாள் இறுதிப் போட்டியிலும் தென்னாபிரிக்க அணி வீரர் ககிசோ ரபாடாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் ரபாடா மற்றும் திக்வெல்ல’வினது போட்டிப் பணத்தில் 50% தண்டமாக அறவிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது புதிய சட்டதிட்டங்கள் அமுலுக்கு..

wpengine

மொரட்டுவ விபத்து : 2 சிறுவர்கள் பலி தாய் கவலைக்கிடம்

wpengine

அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!

Azeem Kilabdeen