உள்நாட்டு செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரதும் விளக்கமறியல் நீடிப்பு…



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உள்ளிட்ட நால்வரை, எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று(20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொலைச் சந்தேக நபர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

மொரகஹகந்த – களுகங்கை நீர்த்தேக்க அபிவிருத்தி திட்டத்தின் புதையல் பொருட்கள் பதிக்கும் நிகழ்வு இன்று.

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் அழைப்பு

wpengine

கொவிஷீல்ட் செலுத்தம் : 500,000 ஐ கடந்தது

wpengine