விளையாட்டு

சச்சினுக்கு இன்னும் மவுசு குறையவில்லை – கில்கிறிஸ்டை தள்ளிய சங்கா



அவுஸ்திரேலியாவின் பிரபல இணையத்தளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

அந்த இணையத்தளம் 2000ம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டியில் கலக்கிக் கொண்டிருந்த வீரர்கள் 10 பேரின் பட்டியலிட்டு இதில் யார் சிறந்த வீரர் என்று கருத்து கணிப்பு நடத்தியது.

இதில் சச்சின் டெண்டுல்கர் 23 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்தார். கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னும் அவரது மவுசும் ரேங்கும் சற்றும் குறையவில்லை.

இவரைத் தொடர்ந்து சங்கக்காரா (14%) இரண்டாவது இடம் பிடித்தார். கில்கிறிஸ்ட் (13%), பொண்டிங் (11%), காலிஸ் (11%), ஷேன் வார்ன் (10%), டிவில்லியர்ஸ் (10%), மெக்ராத் (5%), முரளிதரன் (3%), டேல் ஸ்டெய்ன் (1%) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.

Related posts

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 இன்று..

wpengine

சந்திமால் மூன்றவாது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்…

wpengine

மூன்றாவது போட்டியின், நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine