உள்நாட்டு செய்திகள்

துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



பாரத லக்ஷமன் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் அருணிஆடிகல முன்னிலையில் இன்று(13) எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் குறித்த வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி ஒத்திவைத்ததுடன், உடல் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் அருணிஆடிகல உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, வைத்திய நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

சொத்து விபரங்களை உரிய முறையில் வெளியிடாத காரணத்திற்காக இலஞ்ச ஊழல் மோசடி ஒழிப்பு ஆணைக்குழு துமிந்த சில்வா மீது வழக்கு தொடர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் விளக்கமறியலில்

wpengine

இலங்கை அணியின் மற்றுமோர் வீரர் ஓய்வு குறித்து வாய் திறந்தார்..

wpengine

எஸ்.பி திசாநாயக்கவின் தாயார் இயற்கை எய்தினார்

wpengine