விளையாட்டு

அணித் தலைமையிலிருந்து அலாஸ்டர் குக் விலகல்…



கடந்த 2012ம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து அலாஸ்டர் குக் விலகியுள்ளார்.

இதுவரையிலும் 59 போட்டிகளுக்கு தலைமை தாங்கியவர் 2012-ம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதையும், 2013-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் கெப்டன் விருதையும் வென்றுள்ளார்.

சிறந்த அணித்தலைவராக விளங்கிய குக்-க்கு எதிராக சமீப காலமாக விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு காரணம் இந்தியாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது தான். இதனை தொடர்ந்து அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக குக் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக குக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து அணியின் அணித்தலைவராக கடந்த 5 ஆண்டுகளாக நீடித்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்.

அணித்தலைவராக இல்லை என்றாலும் அணியில் நீடிப்பேன், வரவிருக்கும் தலைவருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என தெரிவித்துள்ளார்.

குக் விலகியதை தொடர்ந்து ஜோ ரூட் அணித்தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

எலும்பு முறிவினால் கரன்ஷர்மா விலகல்

wpengine

T20 WORLD CUP : அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

wpengine

ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகல்..

wpengine