உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாலபே கல்லூரி விவகாரம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தீர்மானங்களுக்கு ஜேவிபி முழு ஆதரவு…



மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தாம் முழுமையாக ஆதரவளிப்பதாக ஜே.வி. பி தெரிவித்துள்ளது.

அரச மருத்துவர்கள் சங்கத்தினருடன் நேற்று(06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜே.வி. பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை சட்டபூர்வமானதாக்குவதற்காக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் அதிலுள்ள சட்ட ரீதியான முரண்பாடுகள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.

இதற்கமைய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக செயற்படுவதற்காக தாம் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் தெளிவுபடுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும்..

wpengine

மாந்தை மேற்கு பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்…

wpengine

அரச சொத்துக்கள் குறித்து இதுவரை முறையான தணிக்கை இல்லை

Azeem Kilabdeen