உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கலந்துரையாடல்…



புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சிக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவுக்கு வெளியில் மேற்குறித்த இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜேவிபி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கலந்து கொள்ளும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது புதிய அரசியல் யாப்பு உருவாக்க விடயத்தில் பொது இணக்கப்பாடொன்றினை ஏற்படுத்திக் கொள்வதே இதன் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம், யாப்பு உருவாக்கத்துக்கான பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் மீண்டும் சந்திக்கவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று 60வது ஆண்டில் கால்பதிக்கும் தேர்தல் திணைக்களம்

wpengine

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் கண்டியில் இளைஞர் யுவதிகளுக்கான முழு நாள் செயலமர்வு…

wpengine