உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரசாரங்களுக்காக பஸ்களை பயன்படுத்தி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயற்குழு ஆகிய தரப்புக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கொழும்பு வணிக மேல்நீதிமன்றத்தில் இன்று(26) நடைபெற்றது.

வழக்கு தொடர்பிலான பிரதிவாதங்களை முன்வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் மார்ச் 28 திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Related posts

உருக்குலைந்த நிலையில் 2 சடலங்கள் மீட்பு

wpengine

அகில இலங்கை ரீதியில் முதன்மை நிலைபெற்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

wpengine

மர்மப்பொருளால் கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகடனம்

wpengine