விளையாட்டு

வங்கதேச கிரிக்கெட் வீரர் அரபாத் சன்னி கைது…. [photos]



காதலியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட வங்கதேச கிரிக்கெட் வீரரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அரபாத் சன்னி வங்கதேச கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

இந்நிலையில் 2 வாரத்திற்கு முன்பு அவரது காதலி அரபாத் சன்னி மீது பொலிசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், அரபாத் சன்னி பேஸ்புக்கில் தன்னுடைய பெயரில் போலி அக்கவுண்ட் திறந்து அதில் தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரபாத் சன்னி வீட்டில் அதிரடி சோதனை நடத்திய பொலிசார், அவரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், அரபாத்தை கைது செய்துள்ளோம், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரபாத் சன்னி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள் சிறை அல்லது 1,26,000 டொலர் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Image result for arafat sunny girlfriend

 

Related posts

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

wpengine

ஆஸி அணிக்கு சவாலாக பங்களாதேஷ் அணி இன்று களமிறங்குகிறது

wpengine

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் குமார் சங்கக்கார கருத்து

wpengine