உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோகத்துக்கு புதிய பௌசர்களை கொள்வனவு செய்ய அரசு நிதி ஒதுக்கீடு



வறட்சியால் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு நீரை விநியோகிப்பதற்காக பௌசர்களைக் கொள்வனவு செய்வதற்கு திறைசேரி 5 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக தேசிய இடர்நிவாரண சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்;

380 பௌசர்கள் தற்போது கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து அந்த மாவட்டங்களுக்குத் தேவையானவற்றை கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமீபத்தில் மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பின் போது இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

தேவைக்கு அமைய எதிர்காலத்தில் இரண்டாயிரம் நீர் தாங்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இந்த தேசிய பணியில் முப்படையினர் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீ.பொ.பெரமுன உறுப்பினர்கள் 152 பேரும் இன்று முன்னாள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்…

wpengine

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஷங்ரீலா நிறுவனம் அரசிடம் நட்டஈடு கோருகிறது.

wpengine

சரத் அமுனுகம அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

wpengine