உள்நாட்டு செய்திகள்வணிகம்

25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகம்…



தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் இன்று (21) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே இந்த அறிமுக விழா ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150 வது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92 வது ஆண்டு விழாவை முன்னிட்டே இவ்விழா முன்னெடுக்கப்பட்டது.

தேயிலை பயிர் செய்கையின் எதிர்காலம் கருத்திற் கொண்டு தேயிலைதுறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 92 வருட வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் நாட்டின் ஜனாதிபதியின் முதல் வருகையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வருகை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது அமைச்சர்களான அமைச்சர் நவின் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

பிரதமரால் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கு கட்டுப்பாடு..

wpengine

தாழ்நில பகுதியில் வாழும் மக்களை வெளியேறுமாறு அறிவித்தல்

wpengine

“ஆசிரியர்களை மனம்போன போக்கில் இடமாற்றஞ் செய்து கல்வி நடவடிக்கைகளை பாழாக்காதீர்கள்” நானாட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட்!

wpengine