வணிகம்

உக்ரைன் மற்றும் டென்மார்க்குடன் இலங்கை புதிய ஒப்பந்தம்…



இலங்கை மாலுமிகளுக்கு சர்வதேச கப்பல்களில் பணிப்புரிய கூடிய வகையிலான அங்கீகார சான்றிதழ் பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் உக்ரைன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கைச்சாத்திட உள்ளது.

மாலுமிகள் வெளிநாட்டு கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல்களில் பணிபுரிய வேண்டுமெனின், அவர்கள் தேர்ச்சி சான்றிதழுக்கு மேலதிகமாக அங்கீகார சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடல் வேண்டும். இலங்கை இது வரை 30 நாடுகளுடன் இவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.

இதனடிப்படையில் மாலுமிகளுக்கான சான்றிதழ்களை வழங்குவது தொடர்பில், இலங்கை உக்ரைன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் ஒப்பந்தங்களை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

‘தெனுவர மெனிகே’ சேவை ஆரம்பம்

wpengine

PEACE EXPO & COLOMBO FOOD FEST 2019 – உணவு திருவிழா நாளை

wpengine

பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை – நிறுவனம் சுற்றிவளைப்பு

wpengine