உள்நாட்டு செய்திகள்

“நான் நிரபராதி – சத்தியம் செய்யவும் துணியமாட்டேன்…” – நாமல்



ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகாது, ஆணைக்குழுவை அவமதித்ததாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் தாம் நிரபராதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலங்களை வழங்குவதற்கு தாம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருந்த போதும், பல தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருக்கவில்லை.

இதனால் அவருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழு, அவமதிப்பு வழக்கினை பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு மீண்டும் இந்த மாதம் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

லலித் ஜெயசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

wpengine

ஊரடங்கு உத்தரவினை மீறிய 1599 பேர் கைது

wpengine

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

wpengine