உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கை இன்று(17) அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிப்பு..



பிரதேச எல்லை நிர்ணய அறிக்கை இன்று(17) அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் இதனை கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கைச்சாத்திடாத நிலையில், கடந்த முறை இந்த அறிக்கையை ஏற்பதற்கு, அமைச்சர் பைசர் முஸ்தபா மறுத்திருந்தார்.

பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதி இதில் கைச்சாத்திட்டிருந்தாலும், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் இன்னும் கைச்சாத்திடவில்லை.

இந்த நிலையில் இன்றும் அவர் கைச்சாத்திடாத பட்சத்தில், நான்கு பேரின் கைச்சாத்துடன் குறித்த அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

ரணிலின் அதிரடி தீர்மானம் ; பதவியை பறிக்க நடவடிக்கை

wpengine

தொடர்ந்தும் பழிவாங்கப்பட்டால் கடுமையான தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும் – மின்சார சபை எச்சரிக்கை..

wpengine

எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளர் விளக்கமறியலில்

wpengine