உள்நாட்டு செய்திகள்

வில்பத்து விவகாரம் – எழுந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்கள்…



வில்பத்து வனப்பகுதியை சேதப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்ற பொய்கள் என,வர்த்தக மற்றும் கைத்தொழில்  அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

தெரண ஊடகத்தில் ஔிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

2012ம் ஆண்டு பாரம்பரிய இடம் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக வில்பத்து அண்டிய பகுதி வர்த்தமானியில் இணைக்கப்பட்டதாகவும், அங்கிருந்த மக்கள் புத்தளம் பகுதியிலுள்ள நலன்புரி முகாமில் தங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், 22 வருடங்களின் பின்னர் மீளவும் அம் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்கையில் அது அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரிஷாட் பதியூதின் மேலும் கூறியுள்ளார்.

எனவே, இந்நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் பாரம்பரியமாக அங்கிருந்த மக்களுக்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு வினவப்பட்ட கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த ரிஷாட் பதியூதின், தனது சகோதரர் ஒருவர் தங்கம் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌியாக தகவல் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு இரு சகோதரர்கள் இருப்பதாக கூறிய அவர், ஒருவர் வர்த்தகர் எனவும் மற்றையவர் மாகாண சபை உறுப்பினர் எனவும் குறிப்பிட்டதோடு, அவர்கள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

எதிர்வரும் வருடத்தில் உயர்தரப்பரீட்சைக்கள் ஏப்ரல் மாதத்தில்

wpengine

தேசபந்து தென்னகோனை மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை!

Azeem Kilabdeen