உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை ஜனவரி 23ம் திகதியன்று..



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான இறுதி முடிவை ஜனவரி 23ம் திகதிக்கு பின்னர் எடுக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று(09) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடவுள்ளது

wpengine

சீனா S-14 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு..

wpengine

ரிஷாட் பதியுதீன் எம்.பி – அமெரிக்க தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு!

Azeem Kilabdeen