உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க எல்லையில் கட்டும் தடுப்பு சுவருக்கு மெக்சிகோ பணம் வழங்க வேண்டும் – ட்ரம்ப்



எல்லையில் ஊடுருவலை தடுக்க அமெரிக்கா கட்டும் சுவருக்கு மெக்சிகோ பணம் வழங்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மெக்சிகோ மக்களின் ஊடுருவலை தடுக்க அமெரிக்க எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என அதிபர் தேர்தலின் போது டொனால்டு டிரம்ப் வாக்குறுதி அளித்து இருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான அவர் எதிர்வரும் 20ம் திகதி பொறுப்பு ஏற்க உள்ளார்.

இந்நிலையில் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம் கோடல் ஹில்வில் நடந்தது. இக்கூட்டத்தில் குடியரசு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே ஒரு செய்தி நிறுவனத்திற்கு டிரம்ப் பேட்டி அளிக்கையில்;

தேர்தலில் அளித்த வாக்குறுதி படி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டப்படும். வரி செலுத்தும் நிறுவனம் மூலம் இந்த சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றார்.

மேலும், சுவர் கட்டுவதற்கான செலவு முழுவதையும் மெக்சிகோ ஏற்று அதற்கான பணத்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என உறுதிப்பட கூறினார்.

Related posts

இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு அவசர சிகிச்சை பிரிவில்

wpengine

ஜனாதிபதித் தேர்தல் – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

wpengine

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் இன்று(22)…

wpengine