உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

துமிந்த சில்வா நோயாளர் காவு வண்டியில் நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்டார்..



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரவின் படுகொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று(05) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார்.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலான வழக்குகள் மூன்றுக்கு அவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவின் சீரற்ற உடல்நிலை காரணமாக சிறைச்சாலைகள் வாகனத்தில் அல்லாது, நோயாளர் காவு வண்டியிலேயே, நீதிமன்றத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டாலும் அவரால் காவு வண்டியினை விட்டு இறங்க முடியாதளவு உடல்நிலை மோசமாக உள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிபதி அருணி ஆட்டிகல துமிந்த சில்வா குறித்த அறிக்கையினை இரு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

கண்டி, கொஹாகொடா குப்பை மேட்டில் எரிவாயு அச்சுறுத்தல்..

wpengine

5000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 04 இளைஞர்கள் கைது

wpengine