உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிலக்கரி கொள்வனவு மற்றும் அரிசி இறக்குமதி மாபியா தொடர்பில் கோப் குழு விசாரணை..



பொது நிறுவனங்கள் தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக் குழு, சர்ச்சைக்குரிய நிலக்கரி கொள்வனவு மற்றும் 2014-2015ல் இடம்பெற்ற அரிசி இறக்குமதி மோசடி என்பன தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் சுனில் ஹந்துநெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை அடிப்படையில் குறித்த இந்த விசாரணைகள் இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்த கணக்காய்வு அறிக்கை கடந்த செவ்வாய்க் கிழமை(27) கணக்காய்வாளர் நாயகத்தினால் தம்மிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்வதற்கு கோப் குழுவின் உறுப்பினர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி குழுவின் அடுத்த சந்திப்பில் இந்த விடயங்கள் குறித்த விசாரணைக்கான திகதி குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாலபே தனியார் வைத்திய கல்லூரியின் உரிமைகள் உச்சநீதி மன்றத்தினால் உறுதி

wpengine

இன்று நள்ளிரவு முதல் தடை

wpengine

பொது போக்குவரத்து வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்?

wpengine