உள்நாட்டு செய்திகள்

நானும் அதிருப்தியிலேயே இருக்கிறேன் – ஹரீன் தெரிவிப்பு…



கடந்த ராஜபக்ஷ ஆட்சியினை தோற்கடித்து நல்லாட்சியினை தோற்றுவிக்க அரும்பாடுபட்ட தனக்கு தற்போது நல்லாட்சி அரசில் அதிருப்தியே மிஞ்சியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களது அதிருப்தியினால் மட்டும் ஆட்சியினைக் கவிழ்க்க முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆட்சியினை  கவிழ்ப்பதா இல்லை முன்னெடுத்துச் செல்வதா என்பதனை தீர்மானிப்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர்  மாத்திரமே எனத் தெரிவித்த அமைச்சர் ஹரீன், அவ்வாறு ஆட்சியினைக் கவிழ்ப்பது குறித்து அவர்கள் இருவரிடமும் எவ்வித யோசனைகளும் இல்லையென தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முறைப்பாடுகள் பதிவு

Azeem Kilabdeen

பள்ளிவாசலை உடைக்க வேண்டிய தேவை எழுந்தது ஏன்? – அம்பாறையில் அமைச்சர் ரிஷாட் கேள்வி!

wpengine

‘‘மக்கள் பேரணி கொழும்புக்கு’’ அனைவரும் ஒன்று கூடப்பட வேண்டிய இடம் குறித்து அறிவித்தல்…

wpengine