உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவுக்கும் இடையில் விரிசல்..



இலங்கை கிரிக்கெட் தேசிய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தலையீடு அதிகம் இருப்பதாக அணியின் தேர்வாளர்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா – இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் இன்று(26) தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகின்றன.

இந்நிலையில், தாங்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்ய விரும்பாத சில வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என இலங்கை அணியின் நிர்வாக உறுப்பினர்கள் தங்களை கட்டாயப்படுத்துவதாக சனத் ஜெயசூர்யா தலைமையில் செயல்படும் இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு குற்றம் சாட்டியுள்ளது.

அதே போல இலங்கை அணிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு எங்களை போக விடாமல் அவர்கள் தடுப்பதாகவும் தேர்வு குழு கூறியுள்ளது.

இது போல விடயங்கள் தொடருமானால், எங்கள் பதவியை நாங்கள் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related posts

ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

wpengine

மஹிந்த சமரசிங்கவுக்கு தூதுவர் பதவி

wpengine

நிதியமைச்சின் செயலாளர் சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம் தொடர்பான ஆணைக்குழுவில்…

wpengine