ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

வெலே சுதாவுடன் பணம் கைமாறலில் நடிகை உதயங்கி



திரைப்பட மற்றும் நாடக நடிகை உதயந்தி குலதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதி​யை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனது வங்கிக் கணக்கை முடக்கும் நீதிமன்ற உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி உதயங்கி குலதுங்க தாக்கல் செய்துள்ள மனுவானது  இன்று (19) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரபல போதை பொருள் வர்த்தகர் வெலே சுதாவுடன் உதயங்கி பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பினை பேணியதாக பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

வெலே சுதாவின் தொலைபேசியை சோதனை செய்தபோது இந்த தகவல் வெளியானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அது அப்படியிருக்க, உதயங்கியின் வங்கிக் கணக்கில் நான்கு தடவைகள் தலா 1 லட்சம் என நான்கு லட்சம் ரூபா வெலே சுதாவால் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் உதயங்கியின் பிறந்த தினத்திற்கு 50,000 ரூபா பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உதயங்கி தனது சகோதரி ஒருவரின் வங்கிக் கணக்கில் 100 லட்சம் ரூபா வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உதயங்கி சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன் உதயங்கியின் வங்கிக் கணக்கு முடக்க உத்தரவை இரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி, வங்கிக் கணக்கை முடக்கி மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பிரதியை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம், வழக்கினை ஜூலை 3ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related posts

இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மெண்டிஸ் நிறுவனத்திடம் இருந்து 30 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளார்…

wpengine

பேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் – ரிஷாட் வேண்டுகோள்

wpengine

நாடு முற்றாக முடக்கப்படுவது மாலை?

wpengine

1 comment

haleem Jun 19, 2015 at 4:43 pm

இன்றய கால கட்டத்தில் தமது செல்வாக்கை நல்ல விதமாக பயன்படுத்தாமல் தீய நடவடிக்கைகளுக்கு பயன் படுத்துகின்றனர்

Comments are closed.