உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியலமைப்பை குறித்த முன்மொழிவுகளுக்கான விவாதம் ஜனவரியில்..


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த முன்மொழிவுகள் குறித்து ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கான பணிகளை முன்னெடுப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை உறுதி வழங்கியிருந்தது.

30 வருடங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த நிலையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இதன் பிரகாரம் அரசியலமைப்பு முன்மொழிவுகளை ஆறு உப குழுக்கள் தயாரித்துள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சீன அரச ஊடகத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மிகவும் வெளிப்படையான முறையில் அரசியலமைப்பு உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் முன்னர் அவ்வாறு நடைபெறவில்லை எனவும் அமைச்சர்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கோட்டாவுக்கு அழுத்தம் கொடுத்து வெளியேற்றிய தொழிற் சங்கத்தினர் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் – மஹிந்தானந்த

News Editor

மின்சாரத்துறை நிபுணர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

News Editor

மோட்டார் வாகனங்கள் மீது புதிய வரி…

wpengine