உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மலேசியாவுக்கு விஜயம்..


மலேசியாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (15) ஆம் பயணிக்கவுள்ளார்.

இரண்டு நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, மலேசியாவின் அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதன்போது சுற்றுலாத் துறை, அரச நிருவாகத்துறை உட்பட துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான 6 உடன்படிக்கைகள் மலேசிய அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 6 அம்ச உடன்படிக்கைகள் தொடர்பிலான யோசனைகள், அமைச்சரவையில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷத சில்வாவினால் முன்வைக்கப்பட்டு, அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

நாளை(01) முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கு புதிய தரநிலைகள் அறிமுகம்..

wpengine

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – தற்போது பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவிப்பு..!

wpengine

மொரகஹந்தை நீர்த்தேக்கத்திட்டம் இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine