உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாக்.வீரரின் ஹோட்டல் அறையில் இளம்பெண் – புதிய சர்ச்சை….


வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது ஹொட்டல் அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் வங்கதேச வீரர்களான சபீர் ரஹ்மான் மற்றும் அல் அமின் ஹொசன் இருவரும் தங்கள் அறையில் பெண்களை தங்க வைத்ததாக சிக்கலில் சிக்கினர்.

இதனால் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வங்கதேச கிரிக்கெட் வாரியம், அபராதமும் விதித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் ஒருவரும் தனது அறையில் இளம்பெண் ஒருவரை தங்க வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த பெண் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பாகிஸ்தான் வீரர் யார் என்பது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில் அந்த பாகிஸ்தான் வீரருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு அபராதம் போன்ற ஏதுவும் விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

அரசியலமைப்பு சபையாக நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது

wpengine

லசந்த கொலை – ஓய்வுபெற்ற இரண்டு பிரதி பொலிஸ்மா அதிபர்களையும் மீள் விசாரிக்க CIDயினர் தீர்மானம்.

wpengine