உலக செய்திகள்சூடான செய்திகள்

ஜெயாவின் மறைவையொட்டி தமிழகத்தில் 7 நாட்களுக்கு துக்க தினமாக அறிவிப்பு (VIDEO)


முதல்வர் ஜெயலலிதா மறைவு ,இந்திய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதாவுடன் பழகிய சந்தர்ப்பங்களை நான் என்றும் சந்தோஷமாக நினைவு கூறுவேன். மக்களுடன் நெருக்கமாக தொடர்பு வைத்திருந்த ஜெயலலிதா ஏழைகளின் நலனுக்காவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் என மோடி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி இன்று 6ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு துக்க தினம் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், இந்த 7 நாட்களும் அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=7b33dNOxfzs” width=”560″ height=”315″]

Related posts

சீனாவில் பாரிய நிலநடுக்கம் – 12 பேர் உயிரிழப்பு

wpengine

கொலை அச்சுறுத்தல் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகத் தயார்.. – ரவி..

wpengine

பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்ட மருத்துவருக்கு இடமாற்றம்!

wpengine