ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாடாளுமன்றில் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..! பொலிஸ்மா அதிபருக்கு நடந்தது என்ன..?



இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பேசிக்கொண்டிருந்த போது வந்த மர்ம அழைப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்றில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது. தொலைபேசி அழைப்பு குறித்து திஹாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

யார் இந்த நிலமே? தெவிநுவர ஆலயத்திற்கு தொடர்புடைய குணசேகர குறித்த பேசினாரா? இது தொடர்பில் அரசாங்கம் வழங்கிய பதில் என்ன? பொலிஸ் மா அதிபர் கண்ணில் மண் தூவி சட்டத்தை ஏமாந்துகின்றனரா என அவர் கேள்வி எழுப்பினார்.

உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபரின் செயற்பாடு தவறு. அது குறித்து விசாரணை நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

யார் அந்த நிலமேவை கைது செய்வதனை தடுக்கின்றது? அழுத்தம் பிரயோகிப்பது யார்..? என எங்களுக்கு தெரியும். நிலமே யாருக்கு உதவி செய்கின்றார் என்பதனை நாங்கள் அறிந்துக் கொள்ள விரும்புகின்றோம்.. என அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிக்கு தடை…! 700 பள்ளிகளுக்கு பூட்டு..

wpengine

இந்திய பாடலுக்கு மாணவர்கள் நடனமாடியதால் பிரபல தனியார் கல்லூரியின் அனுமதி இரத்து…

wpengine

பள்ளியினுள் புகுந்து சாட்டை செய்த சிறுத்தை

wpengine